tnpsc current affairs November 2021

Current Affairs Monthly (November 2021) –

Online Exam –Click Here

November-21

2) நம் கடற்படையின் பலத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில், ரேடார்களால் கண்டுபிடிக்க முடியாத, எதிரியை அழிக்கும் ஏவுகணைகள் உடைய, ‘ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம்‘ என்ற போர்க் கப்பலை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அர்ப்பணிக்கிறார்.

இந்த கப்பலை, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள, ‘மசாகோன்’ நிறுவனம் கட்டுமானம் செய்துள்ளது.மும்பையில் இன்று நடக்கும் விழாவில் இந்த கப்பலை, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.


1) ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை, ‘கோவின்’ இணையதளத்தின் வழியாக சேவை நிறுவனங்கள் தெரிந்து கொள்ள புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

November-20

5) தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்கா அதிபராக 1.25 மணி நேரம் பதிவி வகித்து புதிய சாதனை படைத்தார்.


4) ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம், சென்னை பரங்கிமலையில் உள்ளது. இங்கு 11 மாத காலம், பயிற்சி முடித்த இளம் அதிகாரிகளுக்கு, இன்று பயிற்சி நிறைவு விழா நடக்கிறது.இதற்கான ஒருங்கிணைந்த சாகச நிகழ்ச்சி, ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. 11 மாதங்களில் அவர்கள் கற்ற பயிற்சிகளை சாகசமாக செய்து அசத்தினர்.


3) செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், ‘ஆதிச்சநல்லுார் தாமிரபரணி நாகரிகம்’ என்ற, தொல்லியல் ஆவணப்படம், நிறுவன வலைதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.


2) நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டது.


1) நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் விளம்பர பலகையில் இளையராஜாவின் விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பாடல்கள் ஒலிபரப்பு செய்யும் செயலியுடன் இணைந்த இளையராஜா தன்னுடைய பிளேலிஸ்ட்டுகளை விளம்பரப்படுத்தும் வகையில் 3 நிமிட விளம்பரப் படத்தில் நடித்தார். தற்போது இந்த விளம்பரப் படத்தின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று (நவம்பர் 19) இந்த விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டது.

November-19

4) பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் இந்திய மகளிர் கூடைப்பந்து அணி தலைவி அனிதா பால்துரைக்கு, தமிழக பா.ஜ., சார்பில் பாராட்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அனிதா கவுரவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அனிதா கார் வாங்குவதற்கு, தமிழக பா.ஜ., சார்பில், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அண்ணாமலை அறிவித்தார்.


3) இந்த ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது, நடிகை ஹேமமாலினி மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது: இந்த ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது, நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.,யுமான ஹேமமாலினி மற்றும் இந்திய திரைப்பட தணிக்கை குழு தலைவரும், பிரபல பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷிக்கும் வழங்கப்பட உள்ளது. கோவாவில் நடைபெற இருக்கும் 52வது சர்வதேச திரைப்பட விழாவில், இவர்கள் இருவருக்கும் இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


2) மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவர் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில் இதனை அவர் தெரிவித்தார்.


1) நியூயார்க் ஏல நிறுவனத்தால் 43 மில்லியன் டாலருக்கு ஜார்ஜ் வாஷிங்டன் கையெழுத்திட்ட அமெரிக்க சாசன ஆவணம் ஏலம் விடப்பட்டுள்ளது.

November-18

9) முதலமைச்சர் முகஸ்டாலினின் ஆணையின்படி, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியிடங்களில், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3% சதவிகித இட ஒதுக்கீட்டில்,சிலம்பம் விளையாட்டையும் சேர்த்து அரசாணை வெளியிட்டுள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மேற்திட்டத்தில் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபாடி, உஷீ ஆகிய  விளையாட் டும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 

மத்திய அரசின் கேலா இந்தியா திட்டத்தில் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


8)  பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தந்தை பிரகாஷ் படுகோன். 66 வயதான  பிரகாஷ் படுகோன் 1980-களில் பேட்மிண்டன் உலகில் நம்பர் 1 வீரராக வளம் வந்தவர்.

1980 ஆண்டு  நடைபெற்ற இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை  பிரகாஷ் படுகோன் வென்றார் .இதன் மூலம் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றார் . 

முன்னாள் இந்திய  பேட்மிண்டன்  வீரர் பிரகாஷ் படுகோனுக்கு  உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு  வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது.


7) ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி;

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நடந்து வருகின்றன.

இன்று நடந்த மகளிர் தனிநபர் இறுதி போட்டியில் 25 வயதுடைய இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம், தங்க பதக்கம் வென்றுள்ளார்.

ஆடவர் தனிநபர் இறுதி போட்டியில் அபிஷேக் வர்மாவுக்கு வெள்ளி பதக்கம்.


6) உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடைபெறும் வெப்பக்காற்றுப் பலூன் திருவிழாவில் சுற்றுலாப்பயணி பங்கேற்றுள்ளனர். வாரணாசியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையி ல் அமெரிக்காவின் அல்புகர்க் நகரத்துடன் செய்து கொண்ட  உடன்பாட்டின்படி கங்கையாற்றங்கரையில் மூன்று நாள் வெப்பக் காற்றுத் திருவிழா தொடங்கியுள்ளது பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.


5) மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்தத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு


4) அகில இந்திய அளவிலான வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வில் -ஐ.சி.ஏ.ஆர்., திண்டுக்கல் மாணவி அ.ஓவியா 23, தேசிய அளவில் 2ம் இடம், தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


3) ஜெனீவா-சுவிட்சர்லாந்து அரசு ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு, சட்ட ரீதியிலான அனுமதியை வழங்கியுள்ளது.


2) நம் நாட்டில், 75வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்பு விழா நேற்று துவங்கியது

தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்பு விழாவில் நாளை பங்கேற்க இருக்கும் பிரதமர் மோடி, ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள உபகரணங்களை, முப்படை தலைமை தளபதிகளிடம் ஒப்படைக்க உள்ளார்.

அதன்படி, எச்.ஏ.எல்., எனப்படும், ‘ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடட்‘ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை, விமானப்படை தலைமை தளபதியிடம் பிரதமர் ஒப்படைக்க உள்ளார்.மேலும், உள்நாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள ‘ட்ரோன்’ எனப்படும், ஆளில்லா சிறியவகை விமானங்களையும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீன எலக்ட்ரானிக் பாதுகாப்பு கவசத்தையும் ஒப்படைக்கப்பட உள்ளார்


1) உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக ஹெலிகாப்டர்களை, முப்படை தலைமை தளபதிகளிடம் பிரதமர் மோடி நாளை(நவ.,19) ஒப்படைக்க உள்ளார்.

November-16

3) பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் உடுமலையில் ஆடுதுறை-54 என்ற புதிய சம்பா நெல் ரகம் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் புதிய சம்பா நெல் ரகமான ஆடுதுறை 54 என்ற புதிய நெல் ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் அறிமுக நிகழ்ச்சி உடுமலை அருகே உள்ள பெருமாள் புதூரில் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் நடைபெற்றது.

அதிக மகசூல் தரக்கூடிய ஆடுதுறை54 நெல் ரகம் 130 லிருந்து 135 நாட்கள் வயதுடையது. எக்டருக்கு சராசரியாக 6 ஆயிரத்து 300 கிலோ மகசூல் கிடைக்க கூடியது. இந்த புதிய நெல் ரகம் மடக்கு புழுவிற்கு எதிர்ப்பு திறன் கொண்டது. குலைநோய் மற்றும் தண்டு துளைப்பான் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. 


2) தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப உதவி நிதியை, 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


1) உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்தது. அந்நாட்டின் பொருளாதார மதிப்பு 120 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

November-15

1) சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

November-14

6) சிபிஐ இயக்குநர் மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக  நீட்டித்து அவசரச்சட்டம் பிறப்பித்துள்ளது.


5) அமெரிக்கன் ஏர்லைன்சின் நியூயார்க் – டெல்லி நேரடி விமான சேவை சுமார் 10 ஆண்டு இடை வெளிக்கு பிறகு மீண்டும் துவங்கி உள்ளது. நேற்று இரவு (13-11-2011) டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் தரையிரங்கியது.


4) தரையிலிருந்து வான் நோக்கி தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் S-400Triumf ரக ஏவுகணைகள் இந்தியாவுக்கு விநியோகம் செய்ய தொடங்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.


3) பொள்ளாச்சி அருகே ஆழியாறில் வனவிலங்குகள், பறவைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


2) இன்று உலக நீரிழிவு நோய் நாள் -Nov-14


1) 14-11-2021 அன்று முதல்-அமைச்சரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், முதல்-அமைச்சர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறாா்”


November-13

3) கொரோனா பெருந்தொற்று சவாலை எதிர்கொண்ட நேரத்திலும் கூட, குழந்தைகளுக்கான நிமோனியா மற்றும் வயிற்றுப் போக்கு தடுப்பூசி போடும் பணியில் இந்தியா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது’ என, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


2) டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு கேல் ரத்னா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

ஒலிம்பிக் தடகள வரலாற்றில் சாதித்து முதன் முறையாக இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவிக்குமார் (மல்யுத்தம், வெள்ளி), லவ்லினா (குத்துச்சண்டை, வெண்கலம்), பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹரா, மணிஷ் நார்வல் (துப்பாக்கிசுடுதல்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரமோத், கிருஷ்ணா (பாட்மின்டன்), கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), இந்திய பெண்கள் ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், சுனில் செத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) , பிரமோத் பகத்(பாரா பாட்மின்டன் வீரர்) உள்ளிட்ட 12 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார்.

இதேபோல் அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், வாள்சண்டை வீராங்கனை தமிழகத்தை சேர்ந்த சி.ஏ.பவானி தேவி, பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பட்டேல், கபடி வீரர் சந்தீப் நார்வால், டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா, மல்யுத்த வீரர் தீபக் பூனியா, துப்பாக்கி சுடுதல் வீரர் அபிஷேக் வர்மா உள்பட 35 பேர் தேர்வானார்கள். இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஆக்கியில் பதக்கம் வென்ற 16 வீரர்களும் அடங்குவர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை விமரிசையாக நடைபெற்றது. விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி பாராட்டினார்.

கேல் ரத்னா விருதுக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.25 லட்சமும், அர்ஜூனா விருதுக்கு ரூ.15 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இதே போல் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதை தமிழகத்தை சேர்ந்த எஸ்.ராமன் (டேபிள் டென்னிஸ்) உள்பட 10 பேரும், வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதை விகாஸ் குமார் (கபடி), அபிஜீத் குந்தே (செஸ்) உள்பட 5 பேரும் பெற்றனர். துரோணாச்சார்யா விருதுக்கு ரூ.15 லட்சமும், தயான்சந்த் விருதுக்கு ரூ.10 லட்சமும் அளிக்கப்பட்டது.


1) ஐ.நா.,வின் சர்வதேச சட்ட கமிஷனின் உறுப்பினராக, இந்தியாவின் சார்பில் பேராசிரியர் பிமல் படேல், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவிலான சட்ட வரையறைகள் உருவாக்குவது உள்ளிட்டவற்றுக்காக 1947ல் அமைக்கப்பட்டது சர்வதேச சட்டக் கமிஷன்.ஐ.நா.,வின் ஒரு அமைப்பான இதில், 34 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் எட்டு இடங்களுக்கு, 11 நாடுகள் இடையே கடும் போட்டி நிலவியது.

வரும் 2023 ஜன., 1 முதல், ஐந்து ஆண்டுகளுக்கு சர்வதேச சட்டக் கமிஷன் உறுப்பினராக, பேராசிரியர் பிமல் படேல் இருப்பார். ராஷ்ட்ரீய ரக் ஷா பல்கலை துணை வேந்தராகவும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராகவும் அவர் உள்ளார்.


November-12

1) உலக நிமோனியா தினம் –நவம்பர்-12

November-10

1) இந்திய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் ஹரிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் வரும் 30ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

November-6

2) இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டங்களை ஒட்டி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி ஒன்றை தமிழக முதல்வர் நவம்பர் 1ஆம் தேதி திறந்து வைத்தார்.

நவம்பர் 1 முதல் 8ஆம் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.‌வரும் நவம்பர் 14ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


1) மணத்தக்காளி கீரை கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம், கல்லீரல் புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன், மணத்தக்காளி கீரைக்கு உள்ளதாக அங்கீகாரம் அளித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்பவியல் மையம் இது குறித்த ஆய்வை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உட்ரோசைட் பி (Uttroside-B) ஐ மணத்தக்காளி இலையிலிருந்து தனியாகப் பிரித்து எடுத்து ஆய்வு செய்தனர்.

November-5

4) 20வது மாநகராட்சியாக உருவானது தாம்பரம்: அவசர சட்டம் அமல்


3) தென்னாப்ரிக்காவை சேர்ந்த டாமன் கல்கட்டின், தி பிராமிஸ் நாவல், புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 

இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில், புக்கர் பரிசுக்கு முக்கிய இடம் உண்டு. சிறந்த ஆங்கில படைப்புகளுக்கு, புக்கர் பரிசாக, ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பரிசு, 1969ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

2) பிரிட்டனில் மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ளது.


1) உலகில் முதன்முதலாக கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரைக்கு பிரிட்டன் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் மெர்க்ஸ் நிறுவனம் கொரோனாவை குணப்படுத்தும் ‘மால்னுபிரவிர்‘ மாத்திரையை தயாரித்துள்ளதாகவும், அதன் தரவு மற்றும் ஆய்வு முடிவுகளை அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத்திடம் (எப்.டி.ஏ.,) சமர்ப்பித்து அனுமதிக்கு விண்ணப்பித்திருப்பதாக சமீபத்தில் தெரிவித்தது.

November-4

13) காவலா்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு: முதல்வா் உத்தரவு


12) சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பிரிட்டிஷ் தர இயக்ககத்தால் ISO 27001:2013 சா்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் 3-11-2021 நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அந்தச் சான்றிதழை டிஜிபி செ.சைலேந்திரபாபு பெற்றுக்கொண்டாா்.


11) ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா செக்டாரில் உள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, அவர்களுடன் தீபாவளி வாழ்த்துக்களை பிரதமர் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், எல்லை பகுதிக்கு சென்று, அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2014ல் சியாச்சினிலும், 2015ல் பஞ்சாபிலும், 2016ல் ஹிமாச்சல பிரதேசத்தில் சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார்.
2017ல் காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள குரேஸ் பகுதியிலும், 2018ம் ஆண்டில் உத்தரகண்டிலும், 2019ல் காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலும், மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கடந்த ஆண்டு (2020) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள லாங்கிவாலா முகாமில் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.


10) பிரபல ஆன்மிக சுற்றுலாத்தலமான கேதார்நாத்தில் ஆதி சங்கரர் சிலையை நாளை (நவ.,05) பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.


9) நியூயார்க்:உலக வர்த்தகமைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாட்டம்

நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாப்பட்டு உள்ளது.அந்த கட்டடத்தில் தீப விளக்கு எரிவதை போன்று அனிமேஷன் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் ஹட்சன் நதிக்கரையின் இருபுறத்திலும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது.


8) உபரி மின்சாரத்தை முதல் நாடாக இந்தியாவுக்கு விற்கும் நேபாளம்

இந்தியா அனுமதி அளித்துள்ளதன்பேரில், உபரி மின்சாரத்தை இந்திய மின் பரிமாற்ற சந்தையில் முதல் நாடாக நேபாளம் விற்பனை செய்ய உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

நேபாளம் மின்சார ஆணையத்துக்குச் சொந்தமான திரிஷுலி நீா்மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 24 மெகா வாட் மின்சாரம், தேவிகாட் நீா்மின் நிலையத்திலிருந்து 15 மெகா வாட் மின்சாரம் என மொத்தம் 39 மெகா வாட் மின்சாரத்தை அனுகூலமான விலையில் (சந்தை போட்டி விலை) இந்தியாவுக்கு விற்பனை செய்ய உள்ளது.


7) 2021 ல் தீபாவளிப் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காத முதல்வர் எந்தமாநிலத்தை சார்ந்தவர்? 


6) ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை நடிகை திரிஷா பெற்றுள்ளார்.

அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.


5) சர்வதேச உயரம் தாண்டுதல் போட்டிகளில், பதக்கங்கள் வென்ற தங்கவேலு மாரியப்பனுக்கு, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், துணை மேலாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


4) போர் விமானம் மூலம் இலக்கை குறிவைத்து தகர்க்கும் ஏவுகணை சோதனை வெற்றி

ராஜஸ்தானில், போர் விமானம் வாயிலாக இலக்கை குறிவைத்து தகர்க்கும் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில், டி.ஆர்.டி.ஓ., மற்றும் இந்திய விமானப் படையும் இணைந்து, கடந்த அக்டோபர் 28ம் தேதி மற்றும், கடந்த, 3ம் தேதியும் இதற்கான சோதனைகளை நடத்தின.
செயற்கைக்கோள் வாயிலாக அதை செலுத்தும் தொழில்நுட்பமும், இலக்கை துல்லியமாக தகர்க்கும் தொழில்நுட்பமும் பரிசோதிக்கப்பட்டன. இந்த இரண்டு சோதனைகளிலும், இலக்கு துல்லியமாக தகர்க்கப்பட்டன. இதை ராணுவ அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

அதிகபட்சம் 100 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய இந்த குண்டுகள், புதிய ஏவு கருவியின் உதவியுடன் சோதித்துப் பாா்க்கப்பட்டன. இந்த சோதனையில், அந்த ஏவு கருவியும் சிறப்பாகச் செயல்படுவது உறுதி செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் விமான தளங்களைத் தாக்கி அழிப்பதற்காகவே டிஆா்டிஓ இந்த ரக குண்டுகளை பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது.


3)மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது; தமிழகத்தில் 6 பேர் தேர்வு

ஐக்கிய நாடுகள் சபை பிரகடனத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் டிச., 3ம் தேதி, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில், மாற்றுத் திறனாளிகளில் சிறந்த நபர்கள் மற்றும் அவர்களுக்கு சிறந்த சேவை வழங்கியவர்களுக்கு, மாநில மற்றும் மத்திய அரசுகள் விருது வழங்கி கவுரவிக்கின்றன. அந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான தேசிய விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த வேங்கடகிருஷ்ணன், மந்தவெளியைச் சேர்ந்த ஜோதி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம், கானத்துார் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்த தினேஷ்.மேலும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மானஷா தண்டபாணி, நாமக்கல் மாவட்டம் பேட்டப்பாளை யத்தை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர், தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.


2) பாலகோட் தாக்குதலில் பாக்., விமானத்தை சுட்டு வீழ்த்திய நம் விமானப்படை உதவி கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு, குரூப் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.


1) நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு! பெட்ரோல் ரூ.5 டீசல் ரூ.10 விலை குறைப்பு; பிரதமர் மோடி அரசு அதிரடி அறிவிப்பு

November-3

7) சென்னை கொளத்துாரில், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள, கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லுாரியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


6) கடந்த 2016ல் அறிமுகமான யு.பி.ஐ., பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த அக்.,ல் சாதனை அளவாக, யு.பி.ஐ., வாயிலாக, 421 கோடி பரிவர்த்தனைகளின் கீழ், 7.71 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.


5) கேவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வெளிநாடுகள் செல்வதில் இருந்த சிக்கல் தீர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


4) உலகில் அதிக அளவு கரியமில வாயு வெளியேற்றும் நாடு சீனா, அடுத்தடுத்த நிலைகளில் அமெரிக்காவும், ரஷ்யாவும் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும்(5-ம் இடம்) கரியமில வாயு வெளியேற்றத்தில் முறையே நான்காம் ஐந்தாம் இடத்தில் உள்ளன. 


3) ஜி20 கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, 2022-ம் ஆண்டுக்குள் இந்தியா 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்றார்.


2) 2070-ம் ஆண்டுக்குள் இந்தியா, கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது. இந்தியா மட்டும் தான் அளித்த வாக்குறுதியைச் சரியாக நிறைவேற்றிவரும் நாடாக இருக்கிறது என்று பருவநிலை மாறுபாடு மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.


1) இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் கடந்த அக்டோபர் 29, 30 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார்.  இந்த மாநாட்டின் போது உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கல், துருக்கி அதிபர் எர்டோகன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்பட பல தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 

இதனை தொடர்ந்து ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலகத்தலைவர்கள் மாநாடு (COP26), கடந்த 1 மற்றும் 2-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டிலும் பங்கேற்ற பிரதமர் மோடி பிற நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

1995-ம் ஆண்டிலிருந்து காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உச்சி மாநாடு நடந்து வருகிறது. 


November-2

5) ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 

இந்த மாநாட்டில் சர்வதேச காலநிலை சீரமைப்பில் இந்தியாவின் பங்கு குறித்து 10 முக்கிய அம்சங்களையும் பிற முக்கிய விஷயங்களையும் அறிவித்தார்.


4) பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக காங்., தலைவர் சோனியாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், தான் புதிதாக துவங்கியுள்ள கட்சிக்கு ‛பஞ்சாப் லோக் காங்கிரஸ்‘ எனப் பெயரிட்டுள்ளார்.


3) ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா உட்பட 12 வீரர்களுக்கு தயான்சந்த் ‘கேல் ரத்னா’ விருது பெறுகின்றனர்.

இந்திய விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தயான்சந்த் ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ உள்ளிட்ட விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். 

ஒலிம்பிக் தடகள வரலாற்றில் சாதித்து முதன் முறையாக இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவிக்குமார் (மல்யுத்தம், வெள்ளி), லவ்லினா (குத்துச்சண்டை, வெண்கலம்), பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹரா, மணிஷ் நார்வல் (துப்பாக்கிசுடுதல்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரமோத், கிருஷ்ணா (பாட்மின்டன்), கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), இந்திய பெண்கள் ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், சுனில் செத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) சேர்த்து 12 பேர் ‘கேல் ரத்னா’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வரும் 13ல் ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் இவர்களுக்கு விருது வழங்கப்படும்.


2) தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த, 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.


1) இந்தியாவில் துணை நிறுவனம் ஸ்டார்லிங்க் – துவக்கினார் எலான் மஸ்க்

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்குக்கு சொந்தமான, சாட்டிலைட் பிராட்பேண்டு சேவைகளை வழங்கி வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்‘ இந்தியாவில் அடுத்த ஆண்டு டிசம்பரில் இருந்து பிராட்பேண்டு சேவைகளை வழங்க உள்ளது. அரசின் அனுமதியை பொறுத்து, இது இரண்டு லட்சம் ‘ஆக்டிவ் டெர்மினல்’களுடன் செயல்படும்.


November-1

1) திருவிதாங்கூா் சமஸ்தானத்துடன் (கேரளம்) இருந்த கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் 1956இல் நவம்பர்.1ஆம் தேதி இணைந்தது.

இதற்காக பாடுபட்டவா்களில் ஒருவரான நேசமணிக்கு, தமிழக அரசின் சாா்பில் நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அவரது சிலைக்கு ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் மாலை அணிவித்தாா்.

Leave a Reply

Your email address will not be published.