current affairs daily October 2020

current affairs daily October 2020

current affairs daily October 2020. current affairs daily October 2020 . This current affairs are very useful for tnpsc prepares students, and TNUSRB Exam Prepare students.

S.NOCategoryCONTENT
1பொருளாதாரம்,
சர்வதேசம்
இலங்கை அரசு, அன்னியச் செலாவணி பரிமாற்றத் திட்டத்தின் கீழ், மேலும், 7,500 கோடி ரூபாய் தரும்படி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மூலதனச் சந்தைகள் துறை இணையமைச்சர் அஜித் நிவர்டு கப்ரால் கூறியதாவது: இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக, இந்திய ரிசர்வ் வங்கியிடம், ஜூலை மாதம், அன்னியச் செலாவணி பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
2சர்வதேசம்,
தொழில்நுட்பம்
இந்தியாவுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த, ஒரு அமைப்பை உருவாக்கக்கோரி, அமெரிக்க பார்லிமென்ட் செனட் சபையில், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3.திட்டங்கள், பொருளாதாரம்ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பை ஈடுகட்ட மாநிலங்கள், சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து இன்றைய  கூட்டத்தில் (05-10-2020) விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ஏற்றதால் ஏற்படும் வருவாய் இழப்பீட்டை ஈடுகட்ட மாநிலங்கள் கடன்பெறுவது நிதிநிலையைக் கடுமையாக பாதிக்கும் என்பதால், மத்திய அரசே இதைச் செய்ய வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டுள்ள நிலையில், மாநிலத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை 12 ஆயிரம் ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளார்.

(அக்டோபர் 05,  2020)இன்று நள்ளிரவுக்குள் நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையான ரூ.24,000 கோடி அடுத்த வார இறுதிக்குள் வழங்கப்படும் என்றார்.
4விளையாட்டு2020 பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரிசில் நடைபெறுகிறது.
5விளையாட்டு(5/10/2020) ஐபிஎல் தொடரில் 100 கேட்ச்களை பிடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் எனும் சாதனையை, மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார்.
6தேசியம்ரெய்ஸ்-2020 மெய்நிகர் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligent) குறித்த மாபெரும் மெய்நிகர் மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து 2020 இன்று (05-ம்தேதி)முதல் 9-ம் தேதி வரை நடத்துகின்றன.

இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார். சர்வதேச செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்துகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள எம்ஐடி-யின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தின் இயக்குநர் பேராசிரியர் டேனியலா ரூஸ், கூகிள் ரிசர்ச் இந்தியாவின் சமூக நலனுக்கான செயற்கை நுண்ணறிவு இயக்குநர் டாக்டர் மிலிந்த் தம்பே, ஐபிஎம் இந்தியா மற்றும் தெற்காசியாவின் நிர்வாக இயக்குநர் சந்திப் படேல் உள்ளிட்ட நிபுணர்கள் அக்டோபர் 7 அன்று மூன்றாம் நாள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
7விண்வெளிஅமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அதன் ஹப்பிள் தொலைநோக்கி லென்ஸ் மூலம் எடுக்கப்பட்ட ஒரு வெடிக்கும் நட்சத்திரத்தின் அதிசய வீடியோவை பகிர்ந்துள்ளது. 
8தேசியம்மியான்மருக்கு இரண்டு நாட்கள் அரசு முறைபயணமாக ராணுவ தளபதி எம்.எம் நரவனே மற்றும் வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலே  ஆகியோர் சென்றுள்ளனர். இந்த நிலையில், மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சாங் சூகியை இருவரும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது பரஸ்பர நலன்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் கிழக்கு ஆசிய கொள்கையின் அடிப்படையில் இந்தியா- மியான்மருடன் நெருங்கிய நட்புறவை பேணுகிறது. 
9தேசியம்டில்லியில் காற்று மாசுபாடு: விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கினார் கெஜ்ரிவால்
டில்லியில் காற்று மாசுபாடு எதிர்ப்பு தொடர்பாக “யுத் பிரதுஷன் கே விருத்” என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் கெஜ்ரிவால் இன்று தொடங்கினார்.
10விண்வெளிஉலக விண்வெளி வாரம் – அக்டோபர் 4 முதல் 10 வரை
11மாநில செய்திகள்புதிய பொது விநியோக முறை கடைகளில் 30 சதவீதத்தைப் பெண்களுக்கு வழங்க ராஜஸ்தான் அரசானது முடிவு செய்துள்ளது.மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு வேண்டி இது முதலமைச்சர் அசோக் கெஹலாட் அவர்களால் முடிவு செய்யப் பட்டுள்ளது.
12திட்டங்கள்“சஹியோக் எவம் உபர் யோஜ்னா” -ராஜஸ்தான் அரசானது இத்திட்டத்திற்கு ரூ. 11 கோடி என்ற அளவில் கூடுதல் நிதியை ஒதுக்குவதற்கு அம்மாநில அரசானது ஒப்புதல் அளித்து உள்ளது.

இத்திட்டத்தில்மகளின் திருமணம் மற்றும் தகுதியான குடும்பங்களுக்கு உதவி ஆகியவற்றிற்காக நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
13மாநில செய்திகள்அசாமின் ஒரே பெண் முதலமைச்சரான சையதா அன்வாரா தைமூர் அவர்கள் சமீபத்தில் காலமானார்.
14அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்கேட் கியூ தீநுண்மி -இரண்டு மனித சீரம் மாதிரிகளில் கேட் கியூ தீநுண்மிக்கு (Cat que virus) எதிரான எதிர்மங்கள் இருப்பதை இந்திய மருத்துவக் குழுவானது கண்டறிந்துள்ளது.
கேட் கியூ தீநுண்மி ஒரு பொது சுகாதார நோய்க் கிருமியாக மாறக்கூடும் என்பதையும் அது பரவினால் ஒரு கொள்ளை நோய்க்கு வழிவகுக்கும் என்பதையும் இது குறிக்கிறது.
15தேசியம்மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்
மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், உடல் நலக்குறைவால்,(8-10-2020) அன்று காலமானார்.
16பொருளாதாரம்வரும் டிசம்பர் மாதம் முதல் 24 மணிநேரமும் ஆர்.டி.ஜி.எஸ் சேவையை பயன்படுத்தி பரிமாற்றம் செய்யலாம் .

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று (9-10-2020) நிதிக் கொள்கையை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், ‛ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும். நடப்பு நிதியாண்டு இறுதிவரை, இந்த விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி வகிதம் 3.35 சதவீதமாகவே தொடரும். பொருளாதார வளர்ச்சி 2020-21ல் 9.5 சதவீதமாக சரியும்,’ என பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) குறித்த அறிவிப்பை பலரும் வரவேற்றனர். அதாவது, வரும் டிசம்பர் மாதம் முதல் அனைத்து நாட்களும் 24 மணிநேரமும் ஆர்.டிஜி.எஸ் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என அறிவித்தார்.

(11-10-2020)
தேசியம்மறைந்த பா.ஜ., தலைவர் விஜயராஜே நினைவாக, ரூ.100 நாணயத்தை, நாளை(அக்.,12) பிரதமர் மோடி வெளியிடுகிறார். பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. 1919, அக்.,12ல் பிறந்த அவர், 2001, ஜன.,25ல் மறைந்தார். விஜயராஜே, பிறந்த தினத்தை முன்னிட்டு, ரூ.100 நாணயம் நாளை வெளியிடப்படுகிறது.

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *