அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள் -TNUSRB, TNPSC EXAM SHORT NOTES

அடிப்படை உரிமைகள்

 • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 3-வது பகுதியாக உள்ளது. 
 • இந்த 3-வது பகுதி இந்தியாவின் மகாசாசனம் என்றழைக்கப்படுகிறது.
 • சட்டப்பிரிவுகள் 12 லிருந்து 35 வரை உள்ள பிரிவுகள் அடிப்படை உரிமையைப் பற்றியது.

1) சமத்துவ உரிமை

 • பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
 • பிரிவு 15 – மதம், இனம், சாதி, பாலினம் மற்றும்
 • பிறப்பி்டம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடைசெய்தல்.
 • பிரிவு 16 – பொது வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்.
 • பிரிவு 17 – தீண்டாமையை ஒழித்தல்.
 • பிரிவு 18 – இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற  பட்டங்களை நீக்குதல்.

2) சுதந்திர உரிமை

 • பிரிவு 19 – பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இ்டத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை.
 • பிரிவு 20 – குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை.
 • பிரிவு 21 – வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்புப் பெறும் உரிமை.
 • பிரிவு 21 A – தொடக்கக்கல்வி பெறும் உரிமை.
 • பிரிவு 22 – சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.

3) சுரண்டலுக்கு எதிரான உரிமை

 • பிரிவு 23 – கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.
 • பிரிவு 24 – தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.

4) சமயசார்பு உரிமை

 • பிரிவு 25 – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை.
 • பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.
 • பிரிவு 27 – எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்.
 • பிரிவு 28 – மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நி்கழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை.

5) கல்வி, கலாச்சார உரிமை

 • பிரிவு 29 – சிறுபான்மையினரின் எழுத்து, மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.
 • பிரிவு 30 – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.

6) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

 • பிரிவு 31- 1978 ஆம் ஆண்டு, 44 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது. 
 • பிரிவு 32 – தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *