ஒளியியல் Short Notes for tnpsc and Tnusrb Exams

ஒளியியல் Short Notes for tnpsc and Tnusrb Exams

ஒளியியல்

ஒளியியல் (தேர்வுக்கு முக்கியமானவை)

 • ஒளி என்பது ஒருவகை ஆற்றல் (E = hν ), மின்காந்த அலை வடிவத்தில் செல்கின்றது.
 • ஒளி நேர்கோட்டில் செல்லும்.ஒளியின் நேர்கோட்டுப் பண்பினைக் கண்டறிந்த முதல் அறிஞர் -அல் -ஹசன் -ஹயத்தம் (rectilinear propagation of light.)
 • ஒளியின் திசைவேகம் வெற்றிடத்தில் 3 X 10 ^8 மீ/வி (or) 3,00,000 km/s
 • ஒளி வெற்றிடத்தில் பரவும்.
 • ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் பாதையில் மாறுபாடு ஏற்படுகிறது.
 • ஒளியின் திசைவேகமனது அடர் குறை ஊடகத்தில் அதிகமாக இருக்கும்.
 • சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் மாய பிம்பம் ஆகும்.
 • மாய பிம்பத்தை திரையில் பிடிக்க முடியாது , பிம்பம் நேரானது. எ.கா (முகம் பார்க்கும் கண்ணாடி)
 • வெள்ளொளி கதிரானது முப்பட்டகத்தின் வழியாக செல்லும்போது 7 நிறங்களாக பிரிகையடையும் நிகழ்விற்கு நிறப்பிரிகை என்று பெயர். இதனைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்.
 • முதன்மையான இயற்கை ஒளிமூலம் (Source)- சூரியன்
 • பெரிஸ் கோப்பில் இரு சமதள ஆடிகளை ஒன்றுக்கொன்று 45 டிகிரி
  கோணத்தில் அமைக்க வேண்டும். (two plane mirrors are kept 45 degrees to horizontal.)
 • இணைகதிர்கள் வாகனங்களின் முகப்பு விளக்கிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் .(headlight of car gives parallel rays ), சூரியனிடமிருந்து வரும் ஒளி
 • விரி கதிர்கள் : ஒரு புள்ளியிலிருந்து விரிந்து செல்வது ஒளிக்கதிர்கள். உதாரணம் . Flash Light, மெழுகுவர்தியிலிருந்து வரும் ஒளி
 • ஒளியின் நேர்கோட்டுப் பண்பின் காரணமாகச் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன.solar and lunar eclipses are occurring that are due to the property of light known as the rectilinear propagation of light.
 • ஒளி இழை என்பது, முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் படி
  செயல்படும் ஒரு சாதனம் ஆகும்.
 • ஊசித்துளைக்காமிராவில் பெறப்படும் பிம்பம் தலை கீழானது. சமதளஆடியில் தோன்றும் பிம்பம் நேரானது
 • சிவப்பு நிறமானது மற்ற நிறங்களைவிட  அதிக அலைநீளம் கொண்டது.சிவப்பு நிறம் காற்றில் அதிக தொலைவு பயணம் செய்யும். குறைந்த அலைநீளம் உடையது ஊதா (Violet) 
 • வானம் நீலநிறமாக காணப்படுவதற்கு காற்றின் மூலக்கூறுகளால் நீலநிறக்கற்றை முழுவதுமாக சிதறலடிக்கப்படுவதாகும்.
 • ஆடி சமன்பாடு (lense equation) 1/v +1/u =1/f
 • குறைபாடற்ற கண்பார்வை கொண்ட ஒருவருக்கு ஒரு பொருளைத் தெளிவாகக் காணக்கூடிய குறைந்தபட்ச தொலைவு (தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு) 25 செ.மீ (அல்லது) 0.25 மீ
 • குவி ஆடிக்குப்பின் 1.15 மீ தொலைவில் உள்ள பிம்பம் மாயபிம்பம் (VIrtual Image ) ஆகும்.
 • பொருள்கள் எப்போதும் லென்சுக்கு இடப்புறம் தான் வைக்கப்பட வேண்டும்.
 • கலடைஸ்கோப், பெரிஸ்கோப் போன்றவை ஒளியின் பன்முக எதிரொளிப்பு தத்துவததின் (multiple reflection of ligh) அடிப்படையில் இக்கருவி செயல்படுகி்றது.
 • நீர்மூழ்கி கப்பல்களில் பெரிஸ்கோப் பயன்படுகிறது.

ஒளி மூலங்கள் –

 1. இயற்கை ஒளிமூலங்கள் (Natural sources of light) (எ.கா-சூரியன், நட்சத்திரங்கள், மின்மினி பூச்சிகள்(Fireflies), ஜெல்லி மீன்கள், சில ஆழ்கடல் தாவரங்கள்)
 2. செயற்கை ஒளிமூலங்கள்
 • வெப்ப ஒளிமூலம், எ.கா -எரியும் மெழுகுவத்தி,வெண்சுடர் எரி விளக்கு incandescent lamp 
 • வாயுவிற்க ஒளிமூலம் (எ.கா -நியான் விளக்கு, சோடியம் ஆவி விளக்கு)

ஆடி(Mirror):

 • வெள்ளி அல்லது அலுமினிய முலாம் பூசப்பட்ட கண்ணாடித்துண்டு ஆடி ஆகும்.
 • ஆடிகள் 2 வகைப்படும் (1. சமதள ஆடி, 2. வளைந்த பரப்புடைய ஆடி)

குவி ஆடி Convex Mirror:  (குவிக்கும் லென்சு)

 • பொருளின் அளவை விடச்சிறிய பிம்பத்தினை உருவாக்கும்.
 • சமதள ஆடியின் பார்வை புலத்தைவிட குவி ஆடியின் பார்வை புலம் பெரியது.
 • எ.கா சாலையில் வாகனத்தின் பின்னால் வரும் வாகனத்தை காண்பதற்கு பின்னோக்கு கண்ணாடியாக பயன்படுகிறது., சாலைகளின் மிகவும் குறுகிய மறறும் நுட்பமான வளைவுகளில் குவி ஆடிகள் பயன்படுகின்றன.
 • தூரப்பார்வையை சரிசெய்ய பயன்படுகிறது.

குழி ஆடி Concave mirror: (விரிக்கும் லென்சு)

 • இந்தை ஆடியின் அருகில் வைக்கப்பட்ட பொருளை இது பெரிதாக்கிக் காட்டும்.
 • கிட்டப்பார்வையை சரிசெய்ய பயன்படுகிறது.
 • எ.கா ( make-up mirror )அலங்காரம் செய்வதற்கு பயன்படும் கண்ணாடி, சவரக் கண்ணாடி, டார்ச் விளக்குகள், வாகன முகப்பு விளக்குகள் , சூரிய சமயற்கலன்கள், மற்றும் டிஸ் ஆன்டனா
 • பல் மருத்துவர்கள், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
 • வானியல் தொலைநோக்கியில் குழி ஆடி பயன்படுகிறது.

கிட்டப்பார்வை (Myopia)

 • கண் வில்லையின் புறவளைவுப் பகுதி அதிகரிப்பதினாலும்  கண்கோளம் நீட்சியுறுவதாலும் ஏற்படுகிறது.
 • ஒளிக்கதிர் விழித்திரைக்கு முன்னாலேயே குவிக்கப்படுகிறது.

துரப்பார்வை hypermetropia

 • தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க முடியுமு்,
 • விழிக்கோளம் சுருங்குவதனால்

குவியத்தொலைவு

 • ஆடிமையத்திற்கும் முதன்மை குவியத்திற்கும் இடைப்பட்ட தொலைவு குவியத்தொலைவு (Focal length )எனப்படும்.
 • குவியத்தொலைவு = வளைவு ஆரம் / 2

எதிரொளிப்பு விதிகள்

 • படுகதிர், எதிரொளிப்புக்கதிர் மற்றும் படும் புள்ளிக்கு வரையப்படும் குத்துக்கோடு ஆகிய மூன்றும் ஒரேதளத்தில் அமைகின்றன.
 • படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் சமம். i=r

ஸ்நெல் விதி

படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையேயுள்ள தகவு ஒரு மாறிலியாகும். Sin i / Sin r = மாறிலி

முழு அக எதிரொளிப்பு ஏற்பட நிபந்தனைகள்

 • ஒளி அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறைந்த ஊடகத்திற்கு செல்ல வேண்டும்.
 • படுகோணத்தின் மதிப்பு மாறுநிலை கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
 • எ.கா (வைரங்கள் )

நிழல்கள் shadow:

 • ஒளிபுகாப்பொருள்கள் தம் தன் மீது விழும் ஒளியை மேலும் பரவாமல் தடுத்து விடுவதால் நிழல்கள் உருவாகின்றன.
 • நிழல்கள் எப்போதும் ஒளி மூலத்திற்கு எதிர்த்திசையில் உருவாகும்.
 • ஒளி மூலம், ஒளி ஊடுருவாப்பொருள் மற்றும் நிழல் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையும்.
 • நிழலின் உருவம் மற்றும் அளவு, ஒளி ஊடுருவாப் பொருளின் அளவுக்கு நேர்த்தகவில் அமையும்.

சமதள ஆடி

 • நேரான பிம்பம் ( The image is upright)
 • பொருள் மற்றும் பிம்பம் இரண்டும் ஒரே அளவில் இருக்கும்.(The image and the object are the same size)
 • மாய பிம்பம் (The image is virtual )

ஒளி இழை (Fiber Optic Cables)

 • ஒளி இழை என்பது, முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் (Total Internal Reflection)படி செயல்படும் ஒரு சாதனம் ஆகும். 
 • ஒளி இழைகள் கேபிள் தொலைத்தொடர்பு, அகன்ற அலைவரிசை தொடர்புச் சாதனங்கள் போன்ற அதிவேக தொடர்பு அனுப்புகைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

கண்ணுறு ஒளி Visible light:

 • கண்ணுறு ஒளி என்பது பல்வேறு நிறங்களைக் கொண்டது.
 • கண்ணுறு ஒளியின் அலைநீள நெடுக்கம் ஆனது 400 நேனோ
  மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரை காணப்படும்.
 • கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் (VIBGYOR), நம் கண்ணின் விழித்திரையை அடையும் போது, மூளையானது வெண்மையை உணர்கிறது.
 • கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் இல்லாத இடம் கருமையாக அமையும்.
 • முதன்மை நிறங்கள் சிவப்பு, பச்சை மற்றும் நீலம்
 • மெஜந்தா, சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள்ஆகும்.

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *