ஐரோப்பியர்களின் வருகை -Tn police and Tnpsc Short Notes

ஐரோப்பியர்களின் வருகை -Tn police and Tnpsc Short Notes

ஐரோப்பியர்களின் வருகை

போர்ச்சுக்கீசியர்கள்:

 • வாஸ்கோடாகாமா: இவர் 1498 மே 17ல் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.
 • அந்த பகுதி சாமரின் என்னும் மன்னரால் ஆளப்பட்டது.
 • 1501ல் ஒரு தொழிற்சாலையை கொச்சியில் நிறுவினா்.
 • இந்தியாவிற்குக் கடல் வழி காண்பதில் வெற்றி பெற்ற முதல் ஐரோப்பிய நாடு- போர்ச்சுகல்.
 • இந்தியாவில் முதல் போர்ச்சுக்கீசிய ஆளுநர் பிரான்சிஸ்கோ அல்மெய்டா.
 • அவர்கள் இந்துமகா சமுத்திரத்தில் தங்களுடைய  ஆதிகத்தை மேம்படுத்த பின்பற்றிய கொள்கை நீல நிறக் கொள்கை” என அழைக்கப்பட்டது.
 •  கோழிக்கோடு, கொச்சின், கண்ணனூர் ஆகிய இடங்களில் போர்த்துக்கீசியர் பண்டக சாலைகள் நிறுவினர். 

டச்சுக்காரர்கள்:

 • 1602ல் டச்சு கிழக்கிந்திய கம்பெனி தொடங்கியது. 
 • 1605ல் இவர்கள் தங்களது முதல் தொழிற்சாலையை மசூலிப்பட்டினத்தில் (ஆந்திரா) துவங்கினர்.
 • சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு என்னுமிடத்தில் முதல் வணிகத்தலம் கட்டப்படட் து.
 • இவர்களின் முக்கிய நோக்கம் வணிகம். இந்தியாவில் தங்களது அரசு அமைக்கும் எண்ணம் இல்லை.
 • 1623-ல் டச்சுக்காராக் ள் ஆங்கிலேயரை அம்பாயினா என்னுமிடத்தில் படுகொலை செய்தனர். 

ஆங்கிலேயர்கள்:

 • ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி 1599ல் உருவானது. அரசியல் வியாபார அங்கீகாரம் 1600-ல் ராணி எலிபெத்தால் கிழக்கிந்தியாவில் வணிகம் செய்ய வழங்கப்பட்டது.
 • 1613ல் சூரத்தில் வாணிப மையம் அமைக்க சர் தாமஸ் மன்றோ அனுமதி பெற்றார். சூரத், ஆக்ரா, அகமதாபாத், புரோச் நகரில் பண்டகசாலை ஏற்படுத்தப்பட்டது.
 • 1717-ல் ஜான் சர்மேன் முகலாய மன்னர் பரூக்ஷியாரிடமிருந்து கம்பெனிக்கான வாணிபம் செய்யும் அரசு ஆணையைப்பெற்றார். இது ‘மேக்ன கார்ட்டா ஆப் கம்பெனி’ என அழைக்கப்படுகிறது. 

ராபர்ட் கிளைவ்

 • ராபர்ட் கிளைவ் இதில் முக்கியப் பங்காற்றினார். இவர் இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு வித்திட்டவர் ஆவார். அவர் இரண்டு முறை வங்காள கவர்னராக (1758-60) இருந்தார் (பின் 1765-67 வரை) இவர் வங்காளத்தை இரட்டை ஆட்சி முறைக்கு உடப் டுத்தினார். பின் இங்கிலாந்திற்குத் திரும்பினார். 1774-ல் அங்கு தற்கொலை செய்து கொண்டார்.

டேனிஷ்கள் (டேனியர்கள்):

 • டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி 1616-ல் துவக்கம்.
 •  இவர்கள் குடியேற்றங்கள் செராம்பூர் (வங்காளம்), டிராங்கூபர் (தரங்கம்பாடி) (தமிழ்நாடு).
 • இவர்கள் சமய பரப்பாளர்கள். தங்கள் குடியேற்றங்களை 1845ல் ஆங்கிலேயர்களுக்கு விற்று விட்டனர்.

பிரெஞ்சுக்காரர்கள்:

 • பிரான்ஸ் மந்திரி கால்பர்ட்டின் ஆலோசனைப்படி (14ம் லூயி ஆட்சியின் போது) 1664 பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி துவங்கப்பட்டது.
 • இவர்கள் தங்களது முதல் தொழிற்சாலையை 1668ல் சூரத்திலும், 1669ல் மசூலிப்பட்டினத்திலும் அமைத்தனர்.
 • பாண்டிச்சேரி 1674ல் பிரான்சிஸ் மார்டின் என்பவரால் பீஜப்பூர் சுல்தானிடம் புதுச்சேரி என்ற கிராமம் பெறப்பட்டது.

இதை படித்து முடித்தபிறகு பின்வரும் ஆன்லைன் தேர்வு லிங்கை கிளிக் செய்து தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்ளவும்.

ஆன்லைன் தேர்வு -கிளிக் செய்க.

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *