tnpsc current affairs daily 2021-March 4

tnpsc current affairs daily 2021-March 4

1.வாழ எளிதான நகரங்கள் – சென்னைக்கு 4ம் இடம்: 7வது இடத்தில் கோவை

பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், 1- பெங்களூரு , 2- புனே, 3- ஆமதாபாத், 4 – சென்னை, 5 – சூரத், 6- நவி மும்பை, 7- கோவை, 8 – வதோதரா, 9- இந்தூர், 10- கிரேட்டர் மும்பை ,கடைசி இடம் 49- ஸ்ரீநகர்.

இதேபோல், 10 லட்சத்திற்கு கீழ் குறைவாக வசிக்கும் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மக்கள் எளிதாக வாழ தகுதி வாய்ந்த நகரங்கள் பட்டியல் (சேலம் -5வது இடம், வேலூர்-6 வது இடம், 

1- ஷிம்லா, 2- புவனேஸ்வர், 3- சில்வாசா, 4- காக்கிநாடா, 5 – சேலம், 6- வேலூர், 7-காந்திநகர், 8- குருகிராம், 9- தேவங்ரே, 10 – திருச்சி

10 லட்சத்திற்கும் அதிகம் மக்கள் தொகை கொண்ட உள்ளாட்சி அமைப்புகளில், மக்கள் வாழ சிறந்த மாநகராட்சிகள் பட்டியல்

1- புதுடில்லி, 2- திருப்பதி, 3- காந்திநகர், 4-கர்னல், 5 – சேலம், 6- திருப்பூர், 7-பிலாஸ்பூர், 8-உதய்ப்பூர், 9- ஜான்சி, 10- திருநெல்வேலி


1.The Director General of Income Tax (Investigation) has opened a 24×7 control room to receive complaints or information from the public ahead of the Assembly election scheduled in TamilNadu and Puducherry for April 6. The public can dial the toll free number 1800 425 6669 or fax 04428271915 or email itcontrol.chn@gov.in or WhatsApp 94453 94453.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் தகவல்களைப் பெற வருமான வரி இயக்குநர் ஜெனரல் (விசாரணை) அவர்கள் 24×7 கட்டுப்பாட்டு அறையைத் திறந்துள்ளார். இதற்கு பொதுமக்கள் தகவல்கள் மற்றும் புகார்களை 1800 425 6669 (கட்டணமில்லா அழைப்பு எண்), 04428271915 (தொலைநகல் எண்), itcontrol.chn@gov.in (மின்னஞ்சல் முகவரி), 94453 94453 (வாட்ஸ்அப் எண்) ஆகிய வழிகளில் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

India

2.The Union Cabinet, chaired by the Prime Minister, Narendra Modi has approved of the signing of Memorandum of Understanding (MoU) between India and French Republic in the field of renewable energy cooperation. The MoU was signed in January 2021.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்புத் துறையில் இந்தியாவிற்கும் பிரெஞ்சு குடியரசிற்கும் இடையில் ஜனவரி, 2021 இல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

3.The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, approved the signing of a Memorandum of Understanding (MoU) between the Ministry of Agriculture of Indian government and Ministry of Agriculture of the Republic of Fiji for co-operation in the field of agriculture and allied sectors.

வேளாண் துறையில் ஒத்துழைப்புக்காக இந்திய வேளாண் அமைச்சகத்திற்கும் ஃபிஜி நாட்டின் வேளாண் அமைச்சகத்திற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

4.India and Norway have agreed to jointly work in the area of marine spatial planning in the oceanic space for the next five years. The initiative known as Marine Spatial Planning will be implemented by the Ministry of Earth Sciences through the National Centre for Coastal Research for India. This is a part of the Indo-Norway Integrated Ocean Initiative under the Memorandum of Understanding signed between the two countries in 2019. Lakshadweep and Puducherry have been identified as pilot sites for the project.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கடல்சார் இடங்கள் திட்டமிடல் குறித்து கூட்டாக வேலை செய்ய இந்தியாவும் நார்வேவும் ஒப்புக் கொண்டுள்ளன. ‘கடல் இடஞ்சார்ந்த திட்டமிடல்’ எனப்படும் இந்த முயற்சி பூமி அறிவியல் அமைச்சகத்தால் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இது 2019 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ‘இந்தோ-நோர்வே ஒருங்கிணைந்த பெருங்கடல் முன்முயற்சி’யின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்திற்கான சோதனை தளங்களாக லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

International

5.World Wildlife Day is observed every year on March 3. The day is being celebrated in 2021 under the Theme – ‘Forests and Livelihoods: Sustaining People and Planet.’

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 அன்று உலக வனவிலங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது. ‘காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்: மக்களையும் கிரகத்தையும் நிலைநிறுத்துதல்’ என்ற மையப்பொருளின் கீழ் 2021 ஆம் ஆண்டில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

6.World Hearing Day is held on 3 March each year to raise awareness on how to prevent deafness and hearing loss and promote ear and hearing care across the world.

காது மற்றும் செவிப்புலன் பராமரிப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 ஆம் தேதி உலக செவிப்புலன் தினம் அனுசரிக்கப்படுகிறது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Which institution has recently opened a 24×7 control room to receive complaints or information from the public ahead of the Tamil Nadu Assembly election?

Election Commission

Income Tax Department

High Court

State Government

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களிடமிருந்து புகார்கள் அல்லது தகவல்களைப் பெற 24×7 கட்டுப்பாட்டு அறையை எந்த அமைப்பு சமீபத்தில் திறந்துள்ளது?

தேர்தல் ஆணையம்

வருமான வரித்துறை

உயர் நீதிமன்றம்

மாநில அரசு

2.India has recently signed an MoU for renewable energy cooperation with

Fiji

France

Norway

Germany

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா எந்த நாட்டுடன் சமீபத்தில் கையெழுத்திட்டது?

ஃபிஜி

பிரான்ஸ்

நார்வே

ஜெர்மனி

3.World Hearing Day is observed on

1. March 1

2. March 2

3. March 3

4. March 4

உலக செவிப்புலன் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

1. மார்ச் 1

2. மார்ச் 2

3. மார்ச் 3

4. மார்ச் 4

4.What are the pilot sites identified for Marine Spatial Planning initiative?

Lakshadweep

Puducherry

Both 1 and 2

Neither 1 nor 2

கடல் இடஞ்சார்ந்த திட்டமிடல் முயற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சோதனை தளங்கள் யாவை?

லட்சத்தீவு

புதுச்சேரி

1 மற்றும் 2 இரண்டும்

1 அல்லது 2 இல்லை

5.India has recently signed an MoU for co-operation in the field of agriculture and allied sectors with

Fiji

France

Norway

Germany

இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன் விவசாயத் துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

ஃபிஜி

பிரான்ஸ்

நார்வே

ஜெர்மனி

6.What is the theme of World Wildlife Day for the year 2021?

1. Forests and Livelihoods

2. Forests and Lives

3. Forest and Products

4. Forest and Environment

2021 ஆம் ஆண்டிற்கான உலக வனவிலங்கு தினத்தின் மையப்பொருள் என்ன?

1. காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்

2. காடுகள் மற்றும் வாழ்வுகள்

3. காடுகள் மற்றும் தயாரிப்புகள்

4. காடுகள் மற்றும் சுற்றுச்சூழல்

7.The Marine Spatial Planning initiative is implemented by

1. Ministry of Science and Technology

2. Ministry of Earth Science

3. Ministry of Environment

4. Ministry of Shipping

‘கடல் இடஞ்சார்ந்த திட்டமிடல்’ முயற்சி எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

பூமி அறிவியல் அமைச்சகம்

சுற்றுச்சூழல் அமைச்சகம்

கப்பல் அமைச்சகம்

8.Who chairs the Union Cabinet?

President

Prime Minister

Finance Minister

Parliamentary Affairs Minister

மத்திய அமைச்சரவைக்கு யார் தலைமை தாங்குவார்?

ஜனாதிபதி

பிரதமர்

நிதி அமைச்சர்

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்

9.World Wildlife Day is observed on

1. March 1

2. March 2

3. March 3

4. March 4

உலக வனவிலங்கு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

1. மார்ச் 1

2. மார்ச் 2

3. மார்ச் 3

4. மார்ச் 4

10.The Marine Spatial Planning initiative is implemented through

1. India Meteorological Department

2. National Centre for Earth Science Studies

3. National Institute of Ocean Technology

4. National Centre for Coastal Research

கடல் இடஞ்சார்ந்த திட்டமிடல் முயற்சி எந்த நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது?

இந்தியா வானிலை ஆய்வு துறை

தேசிய பூமி அறிவியல் ஆய்வுகளுக்கான மையம்

பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம்

தேசிய கடலோர ஆராய்ச்சிக்கான மையம்

Leave a Reply

Your email address will not be published.